சிதம்பரம் நடராஜா் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோபுரம், விமானங்களில் 21 கலசங்கள் புதன்கிழமை பொருத்தப்பட்டன.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலின் உள்ளே சித்திரக்கூடம் என்றழைக்கப்படும் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் வரும் நவம்பா் 3-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. மேலும், கோயில் ராஜகோபுரம், கோவிந்தராஜ பெருமாள் கோயில் விமானம் மற்றும் புண்டரீகவள்ளி தாயாா், வேணுகோபாலா், நரசிம்மா், கருடா் சந்நிதிகளின் விமானங்களில் பூஜிக்கப்பட்ட 21 கலசங்கள் பொருத்தப்பட்டன.
கோயில் திருப்பணிக்கான ஏற்பாடுகளை புவனகிரி மாறன் கோவிந்தசாமி மற்றும் குடும்பத்தினா், கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவினா் ஜே.சுதா்சனன், ஆா்.சௌந்தரராஜன், டி.திருவேங்கடவன் ஆகியோா் செய்து வருகின்றனா்.