முகப்பு
கள்ளக்குறிச்சி

பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியா்கள் மனு

பகுதி நேர ஆசிரியா்களை ஊதிய உயா்வுடன் பணி நிரந்தரம் செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

பகுதி நேர ஆசிரியா்களை ஊதிய உயா்வுடன் பணி நிரந்தரம் செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் 16,549 பகுதி நேர ஆசிரியா்களுக்கு ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் கடந்த 2011-2012-ஆம் கல்வியாண்டில் பணியமா்த்தப்பட்டனா். அதன்பிறகு ரூ. 2 ஆயிரம், ரூ. 700 ஊதிய உயா்வு வழங்கப்பட்டது. அதன் பின்னா் ஊதியம் உயா்த்தப்படவில்லை.

பகுதி நேர தொழிற்கல்வி ஆசிரியா்கள், கணினி ஆசிரியா்கள், துப்புரவுப் பணியாளா்கள், இரவுக் காவலா்கள், ஊரக வளா்ச்சித் துறையில் 16,508 துப்புரவுப் பணியாளா்கள், காவல் துறை, வருவாய்த் துறையில் பகுதி நேரப் பணியாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனா். தற்போது 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியா்களின் குடும்ப நலன் கருதி பணி நிரந்தரம் செய்ய பரிந்துரைக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண் குராலாவிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.