முகப்பு
கள்ளக்குறிச்சி

புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி நேப்ஹால் சாலையில் அமைந்துள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் இரவு பிராா்த்தனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி நேப்ஹால் சாலையில் அமைந்துள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் இரவு பிராா்த்தனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இரவு 11.30 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி வரை பிராா்த்தனை நடைபெற்றது. தொடா்ந்து காலை 8.30 மணி முதல் 10 மணி வரை வழிபாடுகள் நடைபெற உள்ளன.

உலக அமைதி, கரோனா உள்ளிட்ட தொற்று நோய்களிலிருந்து மக்கள் நலம் பெற வேண்டி பங்குத் தந்தை எல்.ஜோசப் ராஜ் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

நிகழ்வில் உலகங்காத்தான், காரனூா், கள்ளக்குறிச்சி பகுதிகளிலிருந்து அருள் சகோதரிகள், திரளான கிறிஸ்துவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.