முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி: குறைதீா் கூட்டத்தில் 217 மனுக்கள்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 217 மனுக்கள் வரப்பெற்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 217 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா்.

முதியோா் ஓய்வூதியம், பட்டா மாறுதல், மனைப் பட்டா, கல்விக் கடன், விதவை உதவித்தொகை, ஆதரவற்றோா் உதவித்தொகை, தொழில் தொடங்க கடனுதவி, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு, முதலமைச்சரின் பசுமை வீடு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக 217 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களை துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் டி.சுரேஷ், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ரெத்தினமாலா, மாவட்ட வழங்கல் அலுவலா் சு.சிவக்கொழுந்து உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

முன்னதாக, கூட்டத்தில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிடம் அவா்கள் அமா்ந்திருந்த பகுதிக்கே சென்று மனுக்களைப் பெற்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.