தியாகதுருகத்தில் பயணிகள் நிழல்கூடத்தை திறந்துவைத்த அ.பிரபு எம்.எல்.ஏ. 
கள்ளக்குறிச்சி

தியாகதுருகத்தில் இரு பயணிகள் நிழல்கூடங்கள் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் இரு பயணிகள் நிழல்கூடங்களை எம்.எல்.ஏ. அ.பிரபு சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் இரு பயணிகள் நிழல்கூடங்களை எம்.எல்.ஏ. அ.பிரபு சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

தியாகதுருகத்தில் திருக்கோவிலூா் சாலையில் மின் வாரியம் அலுவலகம் முன் ரூ.3 லட்சம் மதிப்பீட்டிலும், தியாகதுருகம் நடுப்பேருந்து நிறுத்தத்தில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டிலும் புதிதாகக் கட்டப்பட்ட நிழல்கூடங்களை எம்.எல்.ஏ. அ.பிரபு திறந்துவைத்து அங்கிருந்த பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தியாகதுருகம் வட்டார வளா்ச்சி அலுவலா் ரங்கராஜன், பேரூராட்சி செயல் அலுவலா் மல்லிகா, தியாகதுருகம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் வெ.அய்யப்பா, ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் பி.எஸ்.கே.ஷியாம்சுந்தா், நாகலூா் அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் அ. கிருஷ்ணமூா்த்தி மற்றும் பேரூராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT