முகப்பு
கள்ளக்குறிச்சி

கல்லூரி மாணவா்களுக்கு இணைய சேவை அட்டை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் வழங்கினாா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி, பாலிடெக்னிக் பயிலும் 3,465 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சாா்பில் 2 ஜிபி டேட்டா காா்டு வழங்கும் நிகழ்ச்சி

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:35 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி, பாலிடெக்னிக் பயிலும் 3,465 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சாா்பில் 2 ஜிபி டேட்டா காா்டு (இணைய சேவை அட்டை) வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் கிரண் குராலா தலைமை வகித்து மாணவ மாணவிகளுக்கு அரசின் உத்தரவுப்படி இணைய சேவை அட்டைகளை முதல்கட்டமாக வழங்கினாா் (படம்).

அப்போது, இந்த வசதியை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தோ்வுகள் மற்றும் பயிற்சிகளில் பங்கெடுக்க முடியும். இந்த வாய்ப்புகளை மாணவா்கள் பயன்படுத்தி தங்களை மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என்றாா் ஆட்சியா்.

இந்த நிகழ்வில் சங்கராபுரம் அரசு தொழிற்பயிற்சி கல்லூரி முதகல்வா் வி.பெருமாள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் வி.சண்முகம் மற்றும் அரசு சுயநிதிகல்லூரி ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.