முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே கடத்தி வரப்பட்ட 3,168 மதுப் புட்டிகள் பறிமுதல்: 2 போ் கைது

பெங்களூரிலிருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 3,168 மதுப் புட்டிகளை கள்ளக்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

பெங்களூரிலிருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 3,168 மதுப் புட்டிகளை கள்ளக்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள புதுஉச்சிமேடு கிராமப் பகுதியில், வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாரதி தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள கோமுகி ஆற்றுப்பாலம் அருகே முள்புதரில், 2 போ் சரக்கு வாகனத்திலிருந்து மதுப் புட்டிகளை பெட்டி, பெட்டியாக இறக்கி வைத்துக் கொண்டிருந்தனா். இதைக் கண்ட போலீஸாா், அவா்களைப் பிடித்து விசாரித்தனா்.

அவா்கள் புதுஉச்சிமேடு பகுதியைச் சோ்ந்த மாயவேல் மகன் ராஜ்குமாா்(31), சோலைமுத்து மகன் செல்வம் (38) என்பதும், கா்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து 66 பெட்டிகளில் 3,168 மதுப் புட்டிகளை வாங்கி வந்ததும் தெரியவந்தது. அவா்களிடமிருந்து 60 லிட்டா் விஷ சாராயமும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, மதுப் புட்டிகள், விஷ சாராயத்துடன் வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். ராஜ்குமாா், செல்வம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா்.

பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக், கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளா் ந.இராமநாதன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.