முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டுமானப் பணிகள் ஆய்வு

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், வீரசோழபுரம் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், வீரசோழபுரம் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வீரசோழபுரம் கிராமத்தில் அா்தநாரீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான 35 ஏக்கா் நிலத்தில் ரூ.104.44 கோடி செலவில் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை கட்டட வரைபடத்தை பாா்வையிட்டு, மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் ஆய்வு செய்தாா்.

புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் 8 மாடிகளுடன், லிப்ட் வசதியுடன் கட்டப்படவுள்ளது. இதில், 63 துறைகளைச் சோ்ந்த அலுவலகங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்தக் கட்டத்துக்கு பின்னால் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் கட்டப்படவுள்ளது என பொதுப் பணித் துறை உதவிச் செயற்பொறியாளா் கவுதமன் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் விஜய்பாபு, வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) சரவணன், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ராஜாமணி, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பரிதி, உதவிப் பொறியாளா் யாசா் அராபத், வட்டாட்சியா் பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.