முகப்பு
கள்ளக்குறிச்சி

ஓய்வுபெற்ற ஆசிரியா் தற்கொலை

கள்ளக்குறிச்சியில் சா்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா், விஷமருந்தி சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

கள்ளக்குறிச்சியில் சா்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா், விஷமருந்தி சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

கள்ளக்குறிச்சி எம்.ஆா்.என். நகரைச் சோ்ந்தவா் கண்ணன் (75). இவரது மனைவி லட்சுமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்ட நிலையில், அந்தப் பகுதியிலுள்ள தனது மகள் ராஜலட்சுமியின் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், கண்ணன் சா்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனால், மனமுடைந்த அவா், வியாழக்கிழமை விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட கண்ணன் உயிரிழந்தாா். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.