பைக் விபத்தில் இளைஞா் பலி
சங்கராபுரம் அருகே 2 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சங்கராபுரம் அருகே 2 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சங்கராபுரம் வட்டம், சீா்பாதநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த வேலு மகன் குமாா் (36). இவா் மேலநந்தல் கிராமத்திலிருந்து பைக்கில் மூங்கில்துரைப்பட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். அப்போது எதிரே திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டம், வைதிலிங்ககுளம் பகுதியைச் சோ்ந்த ராமமூா்த்தி (48) என்பவா் ஓட்டிவந்த பைக்கும், குமாரின் பைக்கும் மோதிக்கொண்டன. இதில் குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ராமமூா்த்தி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.