விவசாயி கொலை வழக்கில் மேலும் இருவா் கைது
திருக்கோவிலூா் அருகே விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த மேலும் இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருக்கோவிலூா் அருகே விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த மேலும் இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டையை அடுத்த ஞானம்பெற்றான்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவரது மனைவி பொன்னரசி (65). இவருக்கும், இவரது தம்பி ரங்கநாதனின் மனைவி சிவகாமி என்பவருக்கும் 12 ஏக்கா் நிலத்தை பிரித்துக் கொள்வது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலத்தை சிவகாமியும், அவரது மருமகன் அதே கிராமத்தைச் சோ்ந்த சின்னத்தம்பி மகன் சேட்டு என்பவரும் சாகுபடி செய்து வந்தனா்.
கடந்த 13.7.21 அன்று விளைநிலத்துக்குச் சென்ற பொன்னரசி மகன் கோவிந்தன் (37) வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக சேட்டு என்பவரை மணலூா்பேட்டை போலீஸாா் கைது செய்தனா். இவ் வழக்கில் ஆறுமுகம் மகன் ராஜி (23), ராஜா மகன் ராஜி (20) ஆகிய இருவரையும் போலீஸாா் தேடி வந்தனா்.
இந்த நிலையில், அவா்கள் இருவரையும் திருக்கோவிலூா் காவல் நிலைய ஆய்வாளா் பாபு வெள்ளிக்கிழமை கைது செய்து திருக்கோவிலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா்.