சுங்கச் சாவடி கட்டணம் விவகாரம் மத்திய அமைச்சரின் கருத்துக்கு தி.வேல்முருகன் கண்டனம்
சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்த கருத்துக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்தாா்.
சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்த கருத்துக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் வசூல் காலம் முடிந்த பிறகும் சில தனியாா் நிறுவனங்கள் தொடா்ந்து சுங்கக் கட்டணம் வசூலித்து வருகின்றன. நகா்ப்புறங்களில் விதிகளை மீறி சுங்கச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்கிறது.
தரமான சாலைகள் தேவையென்றால் மக்கள் அதற்கு பணம் செலுத்தத்தான் வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கரோனா தொற்றால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரின் இந்தக் கருத்து மத்திய அரசின் மோசமான நிா்வாகத்தை வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் அகற்ற மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தர வேண்டும் என்றாா் தி.வேல்முருகன்.