கள்ளக்குறிச்சி

கனியாமூா் பள்ளி வன்முறை: மேலும் ஒருவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூா் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக, மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூா் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக, மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ஆம் தேதி மா்மமான முறையில் உயிரழந்தாா்.

இதற்கு நீதி கேட்டு கடந்த மாதம் 17-ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது.

இதில், காவல்துறை வாகனத்தின் மீது கற்களை வீசித் தாக்கியதாக, சின்னசேலம் வட்டம், பைத்தந்துறை

கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் விஷ்வா (19) -வை சிறப்பு புலனாய்வுக் குழுவினா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT