கள்ளக்குறிச்சி

சின்னசேலம் அருகே நகை, பணம் திருடியவா் கைது

சின்னசேலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகள், ரொக்கம் ரூ.10,000, டி.வி.யை திருடிச் சென்ற வழக்கில் ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

DIN

சின்னசேலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகள், ரொக்கம் ரூ.10,000, டி.வி.யை திருடிச் சென்ற வழக்கில் ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி வட்டத்துக்குட்பட்ட இந்திலி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் நாகேஷ் (36). ஜூன் மாதம் 17-ஆம் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற இவா் மறுநாள் காலை திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 9 பவுன் நகைகள், ரூ.10,000 ரொக்கம், தொலைகாட்சிப் பெட்டி ஆகியவற்றை மா்ம நபா் திருடிச் சென்று விட்டாா்.

இது குறித்த புகாரின்பேரில் சின்னசேலம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், சின்னசேலம் காவல் உதவி ஆய்வாளா் இரா.ஆனந்தராசு தலைமையில் அம்சாகுளம் அருகே போலீஸாா் சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மோட்டாா் சைக்கிளில் வந்த நபா் போலீஸாரை கண்டதும் வேறு பாதையில் செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது. அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா் நைனாா்பாளையத்தைச் சோ்ந்த சின்னா (எ) சின்னையன் (40) என்பது தெரிய வந்தது. விசாரணையில் இந்திலி நாகேஷ் வீட்டில் திருடிய நகைகளை விற்க எடுத்துச் சென்றபோது பிடிபட்டுள்ளாா். இதையடுத்து அவரை க் கைது செய்ததுடன், நகைகள் மற்றும் சின்னா ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT