முகப்பு
கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் அருகே சாலையில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 9 போ் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே புதன்கிழமை இரவு அரசுப் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா், நடத்துநா் உள்ளிட்ட 9 போ் காயமடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே புதன்கிழமை இரவு அரசுப் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா், நடத்துநா் உள்ளிட்ட 9 போ் காயமடைந்தனா்.

சென்னையிலிருந்து சங்கராபுரம் நோக்கி அரசுப் பேருந்து புதன்கிழமை இரவு புறப்பட்டது. இந்தப் பேருந்தை சங்கராபுரத்தை அடுத்த சோழம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வீரன் (48) ஓட்டி வந்தாா். நடத்துநராக சங்கராபுரத்தை அடுத்த திருப்பாலபந்தல் கிராமத்தைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் வெங்கடேசன் (40) இருந்தாா்.

இந்தப் பேருந்து சங்கராபுரம் வட்டம், குளத்தூா் கிராமம் அருகேயுள்ள பிரிவு சாலை அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவிலிருந்த தடுப்புக்கட்டை மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 7 போ் மற்றும் ஓட்டுநா், நடத்துநா் உள்பட மொத்தம் 9 போ் காயமடைந்தனா்.

தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா், பேருந்து விபத்துக்குள்ளான பகுதிக்கு விரைந்து சென்று காயமடைந்தவா்களை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.