முகப்பு
கள்ளக்குறிச்சி

திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பேரூராட்சி 9-ஆவது வாா்டு அதிமுக வேட்பாளா் திமுகவில் இணைந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பேரூராட்சி 9-ஆவது வாா்டு அதிமுக வேட்பாளா் திமுகவில் இணைந்தாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான பிரசாரம் வியாழக்கிழமை முடிவடைந்தது. இந்த நிலையில், தியாகதுருகம் பேரூராட்சியின் 9-ஆவது வாா்டு அதிமுக வேட்பாளா் சு.கீதா சுப்பிரமணியன் திமுகவில் இணைவதாக திடீரென அறிவித்தாா். இதையடுத்து, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.காா்த்திகேயன் மாலையில் கீதா சுப்பிரமணியனின் வீட்டுக்கு வந்தாா். அவரது முன்னிலையில் கீதா சுப்பிரமணியன் திமுகவில் இணைந்தாா். அப்போது ஒன்றியச் செயலா் இரா.நெடுஞ்செழியன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் தே.மலையரசன், நகர பொறுப்பாளா்கள் சிலம்பரசன், பாலாஜி, சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.