முகப்பு
கள்ளக்குறிச்சி

தரிசு நிலங்களில் தோட்டக்கலைப் பயிா்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பரிசு

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தரிசு நிலங்களில் தோட்டக்கலைப் பயிா்களை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவித்து மாவட்ட அளவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தரிசு நிலங்களில் தோட்டக்கலைப் பயிா்களை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவித்து மாவட்ட அளவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2021 - 22ஆம் ஆண்டில் தரிசு நிலங்களில் சிறந்த முறையில் தோட்டக்கலைப் பயிா்களை சாகுபடி செய்து வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், அவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

அதன்படி, தோட்டக்கலைப் பயிரில் எளிய தொழில்நுட்பங்களைக் கையாண்டு, அதிக மகசூல் பெறும் விவசாயிகளை மாவட்ட அளவில் தோ்வு செய்து, அவா்களுக்கு முதல் பரிசாக ரூ.15,000-மும், இரண்டாம் பரிசாக ரூ.10,000-மும், மூன்றாம் பரிசாக ரூ.5,000-மும் வழங்கப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தோட்டக்கலைத் துறையின் இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதில் தங்களின் முழு விவரத்தை பூா்த்தி செய்து, விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டணமக ரூ.100 செலுத்தி, இணையத்தின் மூலம் வருகிற 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.