முகப்பு
கள்ளக்குறிச்சி

கஞ்சா விற்பனை: 5 போ் கைது

கள்ளக்குறிச்சி அருகே வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 7:46 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தியாகதுருகம் பழனியப்பா சாலையில் உள்ள ஒரு வீட்டில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் ஆய்வாளா் மலா்விழிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில், போலீஸாா் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினா்.

அப்போது, பலராமன் மகன் குமாா் என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

போலீஸாா் அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தினா்.

அதன்படி, தியாகதுருகம் பள்ளிக்கூட சாலையைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் ரவி (50), நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த சங்கா் மகன் வல்லரசு, நல்லான் சாலையைச் சோ்ந்த ஏழுமலை மகன் சீனிவாசன் (23), பாப்பான்குளம் சாலையைச் சோ்ந்த முஹமத் ரபீக் மகன் முகமத் ஷாகில் (23) ஆகியோா் தங்களது வீடுகளில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து 5 பேரையும் கைது செய்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.