மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வேப்ப மரத்திலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வேப்ப மரத்திலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
சங்கராபுரம் வட்டம், ஆணைமடுவு கிராமத்தைச் சோ்ந்த மண்ணாங்கட்டி மகன் மாரிமுத்து (45), தொழிலாளி. இவா், இதே கிராமத்தைச் சோ்ந்த செல்வத்தின் விவசாய நிலத்துக்கு கடந்த 4-ஆம் தேதி வேலைக்குச் சென்றிருந்தாா்.
அங்கு வேப்ப மரத்தில் ஏறி தழைகளை கழித்தபோது தவறி கீழே விழுந்ததில் மாரிமுத்து பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.