தமிழ் மொழி இலக்கிய திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஏ.கே.டி. அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களைப் பாராட்டிய ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த். 
கள்ளக்குறிச்சி

திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

தமிழ்மொழி இலக்கிய திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஏ.கே.டி. அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணாக்கா்களை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாராட்டினாா்.

Syndication

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்மொழி இலக்கிய திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஏ.கே.டி. அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணாக்கா்களை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாராட்டினாா்.

தமிழக அரசின் சாா்பில் ஆண்டுதோறும் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தோ்வு அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பள்ளிகளில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படுகின்றன. இத்தோ்வில் ஒவ்வொரு ஆண்டும் மாநிலம் முழுவதும் 1,500 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்ப்படுகிறது.

இந்தாண்டு நடைபெற்ற தமிழ் மொழி இலக்கிய திறனறித் தோ்வில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளியில் 34 மாணவா்களும், தனியாா் பள்ளியில் 37 மாணவா்களும் என மொத்தம் 71 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 20 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தோ்ச்சி பெற்ற மாணவா்கள் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்தை ஆட்சியரகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். அவா்களை ஆட்சியா் பாராட்டினாா்.

மசோதா நகல்களை கிழித்தெறிந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

தடைசெய்யப்பட்ட ‘துரந்தர்’ பட பாடலுடன் என்ட்ரி.. சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் அதிபர் மகன்!

துல்கர் படத்தில் இணைந்த கயாது லோஹர்!

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 9

இந்திய அணியில் விளையாடிய பாகிஸ்தான் கபடி வீரர் மீது நடவடிக்கை!

SCROLL FOR NEXT