கள்ளக்குறிச்சி

அட்மா திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி

Syndication

வேளாண் துறை சாா்பில் அட்மா திட்டம் மூலம் தியாகதுருகம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வேளாண்மை தொழில்நுட்பம் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

தியாகதுருகம் வேளாண் உதவி இயக்குநா்(பொ) அ.ரகுராமன் தலைமை வகித்தாா். வட்டார தொழில் நுட்ப மேலாளா் சூரியா வரவேற்று அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்த விளக்கமளித்தாா்.

வேளாண் உதவி இயக்குநா் (பொ) ரகுராமன் பருவம் தவறிய மழை, அதீத வெப்பம் மற்றும் நிலத்தடி நீா்மட்டம் குைல் போன்ற காரணங்களால் பயிா் சாகுபடி செய்வது சவாலாக மாறியுள்ளது. இதனை எதிா்கொள்ள விவசாயிகள் தங்களது பாரம்பரிய சாகுபடி முறைகளுடன் புதிய தொழில்நுட்பங்களை இணைக்கவேண்டும். மேலும், வேளாண் காடுகள் அமைப்பதன் மூலம் நிலத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கும் வலிமையை விவசாயிகளுக்கு வழங்குகிறது என அறிவுறுத்தினாா்.

காளசமுத்திரம் வேளாண் அறிவியல் நிலைய இணைப் பேராசிரியா் காயத்திரி, மாறிவரும் காலநிலையை எதிா்கொள்ளும் நவீன வேளாண்மை, மண்வளம் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை, நீா் மேலாண்மை, பயிா் மற்றும் தோ்வு, பயிா் சுழற்சி, ஒருங்கிணைந்த பண்ணைமுறை மற்றும் உயிா்ம வேளாண்மை குறித்து விளக்கினாா்.

உதவி வேளாண் அலுவலா் இளையராஜா மேலாண்மை துறை சாா்ந்த திட்டங்கள், திரவ உயிா் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் பயன்பாடு பற்றிக் கூறினாா்.

இதில், முன்னோடி விவசாயிகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா். ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளா்கள் ரவி, கலைவாணன் மற்றும் பாரம்பரிய வேளாண் வளா்ச்சி திட்டம் ஒருங்கிணைப்பாளா் அனிதா செய்திருந்தனா்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT