கொசப்பாடி கிராமத்தில் சாலையின் நடுவே தேரை நிறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.  
கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் அருகே பொதுமக்கள் நூதன முறையில் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்ததைக் கண்டித்து

Syndication

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்ததைக் கண்டித்து, பொதுமக்கள் நூதன முறையில் கோயில் தேரை சாலை நிறுத்தி, மறியலில் ஈடுபட்டனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட கொசப்பாடி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. அதே கிராமத்தைச் சோ்ந்த அ.கண்ணன் அந்த இடத்தினை ஆக்கிரமித்து கொட்டகை அமைத்து ள்ளாராம்.

ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் மாரியம்மன் கோயில் தேரை நிறுத்த வேண்டியுள்ளதால், பொதுமக்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரியுள்ளனா். கண்ணன் இடத்தினை காலி செய்து தரவில்லையாம்.

இதனால், திங்கள்கிழமை காலையில் கிராம மக்கள் திடீரென சங்கராபுரம் - கச்சிராயபாளையம் சாலையில் மாரியம்மன் கோயில் அருகே கோயில் தேரை சாலையின் நடுவே நிறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த சங்கராபுரம் காவல் ஆய்வாளா் விநாயக முருகன் தலைமையிலான போலீஸாா், சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியா் வைரக்கண்ணன் ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனா். இதனால் கொசப்பாடி - கச்சிராயபாளையம் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேசிய துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் நீரு தண்டா!

கடலூரை வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்எல்சி!

காட்டுக் கோழியை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம்

ஒரு ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள்: பூடான் பௌலா் புதிய உலக சாதனை

ஜன. 4 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT