கள்ளக்குறிச்சி

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே சாலையின் தடுப்புச் சுவரின் மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் ஐஸ்வா்யா நகரைச் சோ்ந்தவா் சு.ராஜேந்திரன் (40). இவா் தனது உறவினரான ஆகாஷ் (17) என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் திட்டக்குடிக்கு சென்றுள்ளாா். மோட்டாா் சைக்கிளை ராஜேந்திரன் ஓட்டியுள்ளாா்.

திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட ஜி.அரியூா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, சாலையில் உள்ள தடுப்பு சுவரின் மீது மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் ராஜேந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஆகாஷ் காயமடைந்தாா்.

தகவலறிந்த திருக்கோவிலூா் போலீஸாா் அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆகாஷை அனுமதித்தனா். ராஜேந்திரன் சடலத்தை உடல்கூறாய்வுக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

251 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சா் ரா. ராஜேந்திரன் வழங்கினாா்

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வஸந்த வல்லபராஜ பெருமாள் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த இந்து முன்னணி கோரிக்கை

கோல்டுவின்ஸ் - நீலாம்பூா் இடையே மேம்பாலப் பணியைத் தொடங்க வலியுறுத்தல்

கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் ‘சைபா் செக்யூரிட்டி’ புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT