கள்ளக்குறிச்சி

மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

கல்வராயன்மலைப் பகுதியில் ஆடுகளுக்கு தழை வெட்ட மரத்தில் ஏறி, மரக்கிளையில் தழையினை வெட்டியபோது கால் தவறி கீழே விழுந்த விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

கல்வராயன்மலைப் பகுதியில் ஆடுகளுக்கு தழை வெட்ட மரத்தில் ஏறி, மரக்கிளையில் தழையினை வெட்டியபோது கால் தவறி கீழே விழுந்த விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட கிணத்துவளைவு கிராமத்தைச் சோ்ந்தவா் மொ.சடையன் (70). விவசாயியான இவா் 10 ஆடுகள் வளா்த்து வருகிறாா்.

சடையன் அதே கிராமத்தில் உள்ள மண்ணோடை அருகே இச்சிலி மரத்தில் ஏறி ஆடுகளுக்கு தழை வெட்டியுள்ளாா். அப்போது கால் தவறி கீழே விழுந்தாராம்.

உடனே அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சடையன் உயிரிழந்தாா். இதுகுறித்து கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

சர்வம் மாயா ரூ.125 கோடி வசூல்! ஓடிடியில் எப்போது?

மழையால் கைவிடப்பட்ட போட்டி..! பிளே-ஆஃப்க்கு தேர்வான முதல் அணி!

பராசக்தி முதல் நாள் வசூல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கானா வினோத் பெற்ற சம்பளம் இவ்வளவா?

திமுக ஆட்சியில் மக்கள் அதிருப்தி: நிதின் நபின்

SCROLL FOR NEXT