முகப்பு
புதுச்சேரி

பாஜக மாநிலத் தலைவரை கைது செய்யும் வரை போராட்டம்: தலித் இயக்க போராட்டக் குழு அறிவிப்பு

பெண் எம்எல்ஏவை அவதூறாகப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதனை கைது செய்யும் வரை போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி மாநில அனைத்து தலித் இயக்கங்களின் 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

பெண் எம்எல்ஏவை அவதூறாகப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதனை கைது செய்யும் வரை போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி மாநில அனைத்து தலித் இயக்கங்களின் போராட்டக்குழுத் தலைவர் நீலகங்காதரன் அறிவித்தார்.
 இது குறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு அவர் புதன்கிழமை அளித்த பேட்டி:
 புதுச்சேரியில் பிப்.16-ஆம் தேதி பாப்ஸ்கோ அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த எம்எல்ஏ விஜயவேணியை அவதூறாக, ஜாதியின் பெயரைச் சொல்லி பேசியுள்ளார். இட ஒதுக்கீடு உரிமைக்கும், அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிராக பேசியுள்ளார்.
 இதுபற்றி அறிந்த விஜயவேணி எம்எல்ஏ காவல்துறையில் பி.சி.ஆர். பிரிவில் புகார் அளித்துள்ளார். ஆனால், இதுவரை அவரின் புகார் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 எனவே, பாஜக தலைவர் சாமிநாதன் மீது வழக்குப் பதிவு செய்து, உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும்.
 பாஜக தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நகரம் முழுவதும் கண்டன சுவரொட்டி ஒட்டுவதுடன், தெருமுனை பிரசாரம் மூலம் மக்களிடம் எடுத்துச் செல்லவும் உள்ளோம் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →