முகப்பு
புதுச்சேரி

தேனீ தினம் கடைப்பிடிப்பு

புதுச்சேரியில் சர்வதேச தேனீ தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

Updated On : 21 மே, 2018 at 8:29 AM
பகிர்:

புதுச்சேரியில் சர்வதேச தேனீ தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
மத்திய வேளாண் அமைச்சக அறிவுறுத்தலின்படி,  புதுவை வேளாண் துறையின் கீழ் இயங்கும் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், இந்த விழா முதல் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
"தேனீக்களைப் பாதுகாப்போம்' என்ற தலைப்பில் புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே விழா நடைபெற்றது.
விழாவை புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தொடக்கிவைத்தார்.  அப்போது, தேனீ வளர்ப்பு பற்றிய செயல் விளக்கம், தேனீக்கள் பராமரிப்பு,  பாதுகாக்கும் முறைகள் பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெற்றன.  
புதுவை அரசின் வேளாண் துறைச் செயலர் ஏ.அன்பரசு நோக்கவுரையாற்றினார்.  
வேளாண் இயக்குநர் பி.ராமகிருஷ்ணன் (எ) பாலகாந்தி,  புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க.லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.