புதுச்சேரி

ஏப்.  4, 10, 17 ஆகிய தேதிகளில் தேர்தல் செலவின கணக்குகளை வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்

தேர்தல் செலவினக் கணக்குகளை வேட்பாளர்கள் ஏப். 4, 10, 17 ஆகிய மூன்று நாள்களில் செலவினப் பார்வையாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். 

DIN

தேர்தல் செலவினக் கணக்குகளை வேட்பாளர்கள் ஏப். 4, 10, 17 ஆகிய மூன்று நாள்களில் செலவினப் பார்வையாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். 
தேர்தல் ஆணையத்தின் தேர்தல் செலவினங்களைக் கண்காணித்தல் தொடர்பான அறிவுரைகளின்படி, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மத்திய செலவினப் பார்வையாளர்கள், வேட்பாளர்களால் பராமரிக்கப்படும் தேர்தல் செலவினக் கணக்குகளைக் குறைந்தது மூன்று முறை பார்வையிட்டு, குறைபாடுகள் குறித்த குறிப்புகளைத் தெரிவிக்க வேண்டும். 
அதன்படி, புதுவை மக்களவைத் தொகுதி தேர்தல், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் பராமரிக்கப்படும் தேர்தல் செலவின கணக்குகளை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மத்திய செலவினப் பார்வையாளர்கள் அசிம்குமார் சக்ரபார்த்தி, அஜித் டேன் ஆகியோர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூடத்தில் ஏப்ரல் 4, 10, 17 ஆகிய மூன்று நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட உள்ளனர்.  
எனவே, தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் தேர்தல் செலவின கணக்குகளை நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என  தெரிவிக்கப்
பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

முதல்வா் ஸ்டாலின் ஜன.3-இல் திண்டுக்கல் வருகை!

பனி மூட்டம்: 19 விமானங்களின் சேவைகள் ரத்து

ஆஸ்திரேலியா: போண்டி கடற்கரை தாக்குதலில் ஈடுபட்ட தந்தை-மகன் இந்திய வம்சாவளியினா்

SCROLL FOR NEXT