புதுச்சேரி

பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோயிலில் 500 கிலோ அசைவ உணவு படையல்

புதுவை மாநிலம், பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோயிலில் 500 கிலோ அசைவ உணவுடன் கூத்தாண்டவரை உயிர்ப்பிக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN


புதுவை மாநிலம், பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோயிலில் 500 கிலோ அசைவ உணவுடன் கூத்தாண்டவரை உயிர்ப்பிக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் நடைபெறுவது போல, ஆண்டுதோறும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
அந்த வகையில், நிகழ் ஆண்டு இந்தக் கோயில் திருவிழா மார்ச் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி கடந்த ஏப். 16-ஆம் தேதி இரவு நடைபெற்றது.  இதில் பல்வேறு பகுதிகளில்
இருந்து வந்திருந்த திருநங்கைகள் கூத்தாண்டவருக்கு முன் தாலி கட்டிக் கொண்டனர். 
இதைத் தொடர்ந்து, ஏப். 17-ஆம் தேதி தேரோட்டம், அரவான் களப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்றிரவு திருநங்கைகள் தாலியை அகற்றி வெள்ளைப் புடவை அணிந்தனர்.
இந்த நிலையில், அரவான் பலி முடிந்த 16-ஆம் நாள் கூத்தாண்டவர் உயிர்ப்பித்து வருவதாக ஐதீகம். 
இதையொட்டி, வியாழக்கிழமை இரவு கூத்தாண்டவர் கோயிலில் 500 கிலோ அசைவு உணவுடன் கூடிய படையலிட்டு வழிபாடு நடைபெற்றது.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  சுவாமி தரிசனம் செயதனர். கும்பத்தில் வைத்து படையலிடப்பட்ட அசைவ உணவு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT