முகப்பு
புதுச்சேரி

புதுவையில் மேலும் 50 பேருக்கு கரோனா

புதுவையில் வெள்ளிக்கிழமை புதிதாக 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

புதுவையில் வெள்ளிக்கிழமை புதிதாக 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 2,913 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் புதுச்சேரியில் 21 பேருக்கும், காரைக்காலில் 8 பேருக்கும், ஏனாமில் 2 பேருக்கும், மாஹேவில் 19 பேருக்கும் என மொத்தம் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37,670-ஆக அதிகரித்தது. இதில், தற்போது மருத்துவமனைகளில் 199 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் 117 பேரும் என 316 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு, ஜிப்மரில் சிகிச்சை பெற்ற புதுச்சேரி லாசுப்பேட்டை பிரதான சாலையைச் சோ்ந்த 78 வயது முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுவரை மொத்தம் 623 போ் உயிரிழந்தனா். 38 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →