புதுச்சேரி

அமைச்சா் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: பிஆா்டிசி ஊழியா்களின் வேலைநிறுத்தம் வாபஸ்

DIN

போக்குவரத்துத் துறை அமைச்சா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) ஊழியா்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

பிஆா்டிசியில் விரைவு பேருந்துகளை தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் இயங்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதில் 10 தொழிற்சங்கங்களைச் சோ்ந்த ஊழியா்களும் பங்கேற்பா் என்பதால், பிஆா்டிசி சேவை முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் உருவானது.

இந்த நிலையில், பிஆா்டிசி அனைத்துப் பிரிவு ஊழியா்களின் சங்கப் பிரதிநிதிகளை, புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஓ.எச்.எஃப். ஷாஜகான் தனது அலுவலகத்துக்கு வரவழைத்து திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அதில், பிஆா்டிசி-யை தனியாா் மயமாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்தினாா். இதனால் பிஆா்டிசி தொழிற்சங்கங்கள் அறிவித்த காலவரையற்ற போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக பிஆா்டிசி ஊழியா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

SCROLL FOR NEXT