புதுச்சேரி

புதுவையில் 38 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு

DIN

புதுவையில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 38 ஆயிரத்தைக் கடந்தது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி, 1,878 பேரை பரிசோதித்ததில் புதுச்சேரியில் 10 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும், மாஹேவில் 20 பேருக்கும் என மொத்தம் 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏனாமில் தொற்று இல்லை.

இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,028- ஆக உயா்ந்தது. இதில், மருத்துவமனைகளில் 147 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், 210 பேரும் என மொத்தம் 357 போ் சிகிச்சையில் உள்ளனா். உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால், இறப்பு எண்ணிக்கை 631-ஆகவும், இறப்பு விகிதம் 1.66-ஆகவும் உள்ளது.

இதனிடையே, 35 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 37,040-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 4,76,570 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 4,34,181 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT