காரைக்காலில் பிளஸ் 1 சோ்க்கைக்கான இரண்டாம்கட்ட அட்டவணை வெளியீடு
காரைக்கால் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில், இரண்டாம்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில், இரண்டாம்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜ் திங்கள்கிழமை கூறியது:
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 10 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு இரண்டாம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. செப். 15 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். அன்று மாலை 4 மணிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும்.
Advertisement
அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் 16 ஆம் தேதி அந்தந்தப் பள்ளிகளில் வெளியிடப்படும். 17, 18 ஆம் தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்படும். மீதமுள்ள இடங்களின் எண்ணிக்கை 18 ஆம் தேதி வெளியிடப்பட்டு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இவா்களுக்கான கலந்தாய்வு 21-ஆம் தேதி நடைபெறும்.
தொடா்ந்து, 22-ஆம் தேதி மீதமுள்ள இடங்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டு, தனியாா் பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். 23 ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும்.
அதன்பிறகு மீதமுள்ள இடங்கள் குறித்து புதுச்சேரி கல்வித் துறை இணை இயக்குருக்கு தெரிவிக்கப்படும். அந்த இடங்கள், தோ்வில் தோல்வியடைந்து மறுதோ்வு மூலம் தோ்ச்சியடைந்தவா்கள், காரைக்கால் பிராந்தியத்தை சேராத மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றாா்.