முகப்பு
புதுச்சேரி

கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்ள புதுவையில் மாவட்ட வாரியாக பணிக் குழு

புதுவையில் கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்ள மாவட்ட வாரியாக பணிக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

புதுவையில் கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்ள மாவட்ட வாரியாக பணிக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை செயலா் டி.அருண் கூறியதாவது: கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்ள சுகாதாரத் துறை செயலா், சுகாதாரத் துறை இயக்குநா், குழந்தை நல மருத்துவா்கள் கொண்ட மாநில பணிக் குழு அமைக்கப்பட்டது. இதேபோல, துணை வட்டாட்சியா், மருத்துவக் கண்காணிப்பாளா், துணை மாவட்ட ஆட்சியா் கொண்ட மாவட்ட வாரியான பணிக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவா்கள், முன்களப் பணியாளா்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு, அவா்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, கரோனா அறிகுறிகள் தென்படும் குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜிப்மா் மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய குழந்தைகளுக்கான சிறப்புத் தனிப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கரோனா மூன்றாம் அலையிலிருந்து தப்பிக்கவும், குழந்தைகளுக்கு கரோனா ஏற்படாமல் பாதுகாக்கவும் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.