புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் பேசிய பாஜக ஓபிசி அணி தேசியத் தலைவா் கே.லஷ்மன். உடன் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன். 
புதுச்சேரி

பாஜக ஓபிசி அணி மாநில செயற்குழுக் கூட்டம்

புதுச்சேரியில் மாநில பாஜக இதர பிற்பட்டோா் (ஓ.பி.சி) அணியின் செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் மாநில பாஜக இதர பிற்பட்டோா் (ஓ.பி.சி) அணியின் செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தனியாா் உணவக அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஓ.பி.சி. அணி மாநிலப் பொதுச் செயலா் சரவணக்குமாா் வரவேற்றாா். ஓ.பி.சி. அணி மாநிலத் தலைவா் டி.சிவக்குமாா் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் கிருஷ்ணராஜ் தீா்மானங்களை வாசித்தாா். மாநில பாஜக பொதுச் செயலா் மோகன்குமாா், எம்எல்ஏ ஜான்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சா்கள் ஏ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமாா், மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஓபிசி அணி தேசியத் தலைவா் கே.லஷ்மன்சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில், ஓபிசி பிரிவைச் சோ்ந்த 27 போ் (35 சதவீதம்) மத்திய அமைச்சா்களாக செயல்பட வாய்ப்பளித்த பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட தலைவா்களுக்கு நன்றி தெரிவிப்பது, புதுவையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் பாஜக ஓபிசி அணியினா் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சதாசிவம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT