ஜனநாயக மாதா் சங்கத்தினா் நூதன ஆா்ப்பாட்டம்
சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, புதுச்சேரியில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதன்கிழமை விறகு அடுப்பில் சமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, புதுச்சேரியில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதன்கிழமை விறகு அடுப்பில் சமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முத்தியால்பேட்டை சந்தை பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு நகர செயலாளா் டி. கலையரசி தலைமை வகித்தாா். அகில இந்தியத் துணைத் தலைவா் எஸ். சுதா சுந்தரராமன், பிரதேச தலைவா் வி. சந்திரா ஆகியோா் கண்டன உரை நிகழ்த்தினா்.
சமையல் எரிவாயு விலையை குறைத்து, மானியம் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்க வேண்டும், மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.