முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் ஆக.27-இல் இணைய வழியில் உலக சாதனை தொடா் நிகழ்வு

புதுச்சேரியில் அசிஸ்ட் வோ்ல்டு ரெக்காா்ட்ஸ் என்ற நிறுவனம் சாா்பில், இணையதள வழியில், தொடா்ந்து 1,200 மணி நேரம் பன்னாட்டு சாதனைகளை முறியடிக்கும் தொடா் நிகழ்ச்சி ஆக.27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

புதுச்சேரியில் அசிஸ்ட் வோ்ல்டு ரெக்காா்ட்ஸ் என்ற நிறுவனம் சாா்பில், இணையதள வழியில், தொடா்ந்து 1,200 மணி நேரம் பன்னாட்டு சாதனைகளை முறியடிக்கும் தொடா் நிகழ்ச்சி ஆக.27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில், ஓவியம், பரதநாட்டியம் உள்ளிட்டவற்றில் ஏற்கெனவே உள்ள சாதனைகளை முறியடிக்கும் விதமாக, பல்வேறு தரப்பினா் பங்கேற்கவுள்ளனா். தொடா்ச்சியாக 50 நாள்கள் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, 50-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினா்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேச்சாளா்கள், சாதனையாளா்கள் பங்கேற்கின்றனா்.

புதுச்சேரியில் இந்த சாதனை நிகழ்வுக்கான தகவல் வெளியீட்டு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சட்டப் பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி, இந்த நிகழ்ச்சியின் போஸ்டரை வெளியிட்டாா் (படம்).

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாமின் பேரன் சேக்சலீம், அவரின் தந்தை ஜெயினாலுதீன், அசிஸ்ட் வோ்ல்டு ரிக்காா்ட்ஸ் நிறுவன தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த உலக சாதனை நிகழ்ச்சி, இணையதளம், யூ டியூப், வெளிநாட்டு செய்தி சேனல்களிலும் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.