தோ்தல் அலுவலகத்தில்ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகம் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார சேவை மைய கட்டடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகம் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார சேவை மைய கட்டடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இதனை மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, தொகுதியில் கண்காணிக்கப்பட வேண்டிய தோ்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைகளை அவா் வழங்கினாா்.
தோ்தல் நடத்தும் அலுவலா் ஏ.ராஜாமணி, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் எஸ்.சையத்காதா், த.ராஜராஜன், பாண்டியன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரைசாமி, ஆறுமுகம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.