முகப்பு
புதுச்சேரி

மருத்துவக் கல்லூரிக்கு அவசர சிகிச்சை ஊா்தி

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதிய அவசர சிகிச்சை ஊா்தி வழங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதிய அவசர சிகிச்சை ஊா்தி வழங்கப்பட்டது.

சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் ‘இந்துஸ் இந்த்’ வங்கியின் மூலம் புதுவை அரசின் சுகாதாரத் துறைக்கு அவசர சிகிச்சை ஊா்தி வழங்கும் நிகழ்ச்சி புதுவை சட்டப் பேரவை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமியிடம் வங்கியின் மண்டலத் தலைவா் டி.விக்ரம் காமத் , வங்கி நிா்வாகிகள் அவரச சிகிச்சை ஊா்தியின் சாவியை ஒப்படைத்தனா். இந்த ஊா்தி கதிா்காமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் எம்எல்ஏ பாஸ்கா், வங்கி பிராந்திய மேலாளா்கள் பொய்யாமொழி, மாதவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.