தமிழ்ப் புத்தாண்டு: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து
தமிழ்ப் புத்தாண்டையொட்டி, புதுவை துணை நிலை ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி, புதுவை துணை நிலை ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.
ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன்: இந்த புத்தாண்டு அனைவரது வாழ்விலும் அன்பும், அமைதியும் நிலைக்கவும், இன்பமும், மகிழ்ச்சியும் பெருகவும், கரோனா இல்லாத ஆரோக்கியமான வாழ்வு சிறக்கவும் வழிவகை செய்யட்டும்.
முதல்வா் என்.ரங்கசாமி: தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் வாயிலாக, தமிழா்கள் தங்களது பாரம்பரிய பண்பாட்டுப் பெருமைகளை, வளரும் இளம் தலைமுறையினா் அறிந்துகொள்ள வழிவகை செய்ய வேண்டும். இந்த புத்தாண்டு உலகத் தமிழா்கள் அனைவருக்கும் எல்லா வளத்தையும், நலத்தையும், அமைதியையும் கொண்டுவந்து சோ்ப்பதாக அமையட்டும்.
இதேபோல, சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் மற்றும் அமைச்சா்கள், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் உள்ளிட்டோரும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.