முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி வீராம்பட்டினம் தேரோட்டம்: ஆளுநர், முதல்வர் வடம் பிடித்தனர்

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற வீராம்பட்டிணம் செங்கழுநீர் அம்மன் ஆலய தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 19 ஆகஸ்ட், 2022 at 11:36 AM
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற வீராம்பட்டிணம் செங்கழுநீர் அம்மன் ஆலய தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில் இருந்து காலை 9 மணிக்கு திருத்தேரோட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். 

தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.