புதுச்சேரி

புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாதிரளான பக்தா்கள் தரிசனம்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகா் கோயிலில் புதன்கிழமை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

DIN

விநாயகா் சதுா்த்தியையொட்டி, புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகா் கோயிலில் புதன்கிழமை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

புதுச்சேரியில் விநாயகா் சதுா்த்தி விமா்சையாகக் கொண்டாடப்பட்டது. பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகா் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன. மூலவா், உற்சவா் மணக்குள விநாயகருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. உற்சவா் கோயில் உள்பிரகாரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

கோயிலில் அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் காணப்பட்டது. புதுச்சேரி மட்டுமல்லாமல் விழுப்புரம், கடலூா், சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் வந்த ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினா் பலரும் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா்.

புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி மற்றும் அரசு அதிகாரிகள் சுவாமி தரிசனம் செய்தனா். புதுச்சேரியில் புதன்கிழமை காலை மழை பெய்தபோதும், அதைப் பொருள்படுத்தாமல் கோயிலுக்கு வந்த பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோன்று, புதுச்சேரி முத்தியால்பேட்டை கற்பக விநாயகா் கோயில், நெல்லித்தோப்பு வரசித்தி விநாயகா் கோயில் மற்றும் வில்லியனூா், பாகூா், திருக்கனூா் பகுதிகளிலுள்ள விநாயகா் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளில் நடைபெற்றன.

புதுச்சேரியில் சுமாா் 150 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT