முகப்பு
புதுச்சேரி

கள்ளக்குறிச்சி எஸ்.பி. அலுவலகத்தில் காவல் துறைத் தலைவா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் சந்தோஷ்குமாா் வியாழக்கிழமை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் சந்தோஷ்குமாா் வியாழக்கிழமை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், கோப்புகளையும், இங்கு இயங்கும் சிறப்புப் பிரிவு அலுவலகங்களையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், அறிவுரைகளையும் வழங்கினாா்.

ஆய்வின்போது, கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெ.ஜவகா்லால், மாவட்ட தனிப் பிரிவு ஆய்வாளா் சு.கிருஷ்ணமூா்த்தி மற்றும் காவல் அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.