முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் பாஜக தேசிய மகளிரணி கூட்டம்

புதுச்சேரியில் பாஜக தேசிய மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை பிற்பகல் தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக தேசிய மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை பிற்பகல் தொடங்கியது. பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து மாநிலங்களின் மகளிர் அணி தலைவிகளும், தேசிய மகளிர் அணி நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.

தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தலைமை வகித்து, கூட்டத்தைக் துவக்கினார். இந்தக் கூட்டத்தில் புதுவை மாநில மகளிரணித் தலைவி ஜெயலட்சுமி, பாஜக மாநில தலைவர் சாமிநாதன், மாநில உள்துறை அமைச்சர்  நமச்சிவாயம், மாநில மகளிர் அணி பொறுப்பாளர் எம்.எல்.ஏ. ராமலிங்கம், தேசிய மகளிர் அணி பொறுப்பாளர் குல் சாந்தகுமார் கௌதம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். 

தேசிய பொதுச்செயலாளர் சந்தோஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் அனைத்து மாநில மகளிரணித் தலைவிகளும், பொறுப்பாளர்களும், தேசிய மகளிர் அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

பாஜகவில் மகளிர் அணியினரின் பங்களிப்பு, கட்சி வளர்ச்சிப் பணிகள், மத்திய பாஜக அரசின் சாதனைகளை பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பது, மகளிருக்கான மத்திய அரசின் திட்டங்களை விளக்குதல், மகளிர் அணியை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →