புதுச்சேரி

புதுச்சேரி ஜிப்மர் முற்றுகை: விசிகவினர் 100 பேர் கைது

புதுச்சேரி ஜிப்மரில் ஹிந்தி திணிப்பைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்திய விசிக கட்சியை சேர்ந்த 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

DIN

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் ஹிந்தி திணிப்பைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்திய விசிக கட்சியை சேர்ந்த 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஹிந்தி மொழி கட்டாயப்படுத்தி திணிக்கப்படுவதையும், அதற்காக சுற்றறிக்கை அனுப்பிய அந்த நிர்வாக இயக்குனரைக் கண்டித்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வியாழக்கிழமை, ஜிப்மர் மருத்துவமனை முன்பு கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அந்தக் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். மாநில நிர்வாகிகள் தலையாரி, அரிமா தமிழன், செல்வந்தன்,  எழில்மாறன், தமிழ்வளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு ஜிப்மரில் ஹிந்தி திணிப்பு நடவடிக்கையைக் கண்டித்தும், அது தொடர்பாக நிர்வாகத்தின் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், ஹிந்தி திணிப்புக்கு காரணமான மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனர்.

இதனை அடுத்து ஜிப்மர் வாயில் பகுதிக்கு சென்று முற்றுகையிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை புதுச்சேரி கோரிமேடு காவல்துறையினர் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

SCROLL FOR NEXT