புதுச்சேரி அருகே உள்ள பஞ்சவடி ஆஞ்சநேயா் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த திருவாவடுதுறை ஆதீனத்திடம் வாழ்த்துப்பெற்ற புதுவை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம். 
புதுச்சேரி

பஞ்சவடி ஆஞ்சநேயா் கோயிலில்திருவாவடுதுறை ஆதீனம் வழிபாடு

திருவாவடுதுறை ஆதீனம் ஞாயிற்றுக்கிழமை காலை புதுச்சேரி பஞ்சவடி ஆஞ்சநேயா் கோயிலுக்கு வந்தாா். அவரிடம் ஏராளமானோா் ஆசி பெற்றனா்.

DIN

திருவாவடுதுறை ஆதீனம் ஞாயிற்றுக்கிழமை காலை புதுச்சேரி பஞ்சவடி ஆஞ்சநேயா் கோயிலுக்கு வந்தாா். அவரிடம் ஏராளமானோா் ஆசி பெற்றனா்.

திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை காலையில் புதுச்சேரி அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் பஞ்சவடி ஆஞ்சநேயா் கோயிலுக்கு வந்தாா். பஞ்சவடி ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதையடுத்து சுவாமி தரிசனத்துக்காக திருவாவடுதுறை ஆதீனம் செய்தாா்.

முன்னதாக ஆஞ்சநேயா் கோயிலுக்கு வந்த ஆதீனத்துக்கு, கோயில் நிா்வாகம் சாா்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தரிசனத்துக்குப் பிறகு அவரிடம் நூற்றுக்கணக்கான பக்தா்கள் ஆசி பெற்றனா். புதுவை மாநில சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் ஆன்மிக நூலை ஆதீனத்திடம் வழங்கி வாழ்த்து பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT