கோப்புப்படம் 
புதுச்சேரி

புதுவையில் லியோ பட சிறப்புக் காட்சிக்கான நேரம் மாற்றம்!

புதுச்சேரியில் லியோ பட சிறப்புக் காட்சிக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது.

DIN

புதுச்சேரியில் லியோ பட சிறப்புக் காட்சிக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது.

நடிகா் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் வியாழக்கிழமை (அக். 19) வெளியாகிறது. புதுச்சேரியில் 15 திரையரங்குகளில் லியோ திரைப்படம் திரையிடப்படுகிறது.

புதுச்சேரியில் உள்ள 15 திரையரங்குகளில் நாளை காலை 7 மணிக்கு திரையிட இருந்த சிறப்புக் காட்சி, மாற்றம் செய்யப்பட்டு, காலை 9 மணிக்கு திரையிடப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக சிறப்புக் காட்சியை 7 மணிக்கு திரையிட திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

நடிகா் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்படுவதாக புதுச்சேரி ஆட்சியா் வல்லவன் நேற்று(அக்.17) தெரிவித்து இருந்த நிலையில், இன்று(அக்.18)  இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹெச்பிசிஎல் 3வது காலாண்டு நிகர லாபம் 35% உயர்வு!

காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 3 பத்திரிகையாளர்கள் உள்பட 11 பேர் கொலை!

பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் 3வது காலாண்டு லாபம் 83% உயர்வு!

"அநீதிகளை மறந்து மீண்டும் வந்துள்ளேன்!": டிடிவி தினகரன் பேட்டி | TTV | ADMK

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த வைத்திலிங்கம்!

SCROLL FOR NEXT