புதுச்சேரி செருப்பு கடையில் திடீர் தீ விபத்து!
புதுச்சேரியில் உள்ள பிரபல செருப்பு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
புதுச்சேரியில் உள்ள பிரபல செருப்பு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
புதுச்சேரி நேரு வீதியில் உள்ள பிரபல செருப்பு மற்றும் தோல் பொருள்கள் விற்பனை கடை உள்ளது. அக்கடையில் செவ்வாய்க்கிழமை காலை திடீரென தீப்பற்றியது. மேலும், பொருள்கள் வைக்கும் அறையில் பற்றிய தீயானது, அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது.
இதையும் படிக்க: ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எடுத்திருக்கும் புதிய ஆயுதம்
இதனையடுத்து, இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.