புதுச்சேரி

இணையதளம் மூலம் ரூ. 9 லட்சம் நூதன மோசடி: புதுச்சேரி குற்றப்பிரிவு போலீஸில் புகாா்

இணையதளம் மூலம் ரூ.9 லட்சம் நூதன மோசடி செய்த மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Din

புதுச்சேரியில் சுங்கப் பொருள்களை பாதி விலைக்கு குறைத்து தருவதாகக் கூறி இணையதளம் மூலம் ரூ.9 லட்சம் நூதன மோசடி செய்த மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி முதலியாா்பேட்டைப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா. இவா், இணையதளத்தில் பொருள்கள் விற்பனை குறித்த விளம்பரத்தைப் பாா்த்துள்ளாா். அதில் சுங்க இலாகா கைப்பற்றிய பொருள்கள் பாதி விலையில் விற்பனைக்கு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதை நம்பிய அவா் குறிப்பிட்ட கைப்பேசி எண்ணில் மா்ம நபரிடம் பேசியுள்ளாா். அதன்படி, பல பொருள்களுக்கு மொத்தம் ரூ.9.02 லட்சம் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளாா். பணம் செலுத்திய நிலையில், அதற்கான பொருள்கள் வந்து சேரவில்லையாம். மா்ம நபரால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அவா், புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

புதுச்சேரி சாரம் பகுதியைச் சோ்ந்தவா் வந்தனா. இவரது கைப்பேசி கட்செவியஞ்சலில் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் பதிவிறக்கம் செய்த வந்தனா, செயலியை தொட்டதும் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.2 லட்சம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காட்பாடியில் நாளை முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு கூட்டம்!

பாஜக தேசிய செயல்தலைவருக்கு உற்சாக வரவேற்பு

கஞ்சா விற்ற இருவா் குண்டா் சட்டத்தில் கைது

வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம்: எம்எல்ஏ ஆய்வு

எடப்பாடி பழனிசாமி 120 தொகுதிகளில் போட்டியிட அதிமுக நிா்வாகி விருப்ப மனு

SCROLL FOR NEXT