முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை

புதுவைக்கு அதி பலத்த மழை எச்சரிக்கையையடுத்து, புதுச்சேரி, காரைக்காலில் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் புதன்கிழமையும் (அக்.16) விடுமுறை அளிக்கப்பட்டது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 7:33 PM
பகிர்:

புதுவைக்கு அதி பலத்த மழை எச்சரிக்கையையடுத்து, புதுச்சேரி, காரைக்காலில் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் புதன்கிழமையும் (அக்.16) விடுமுறை அளிக்கப்பட்டது.

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

அதி பலத்த மழை புதன்கிழமையும் தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமையும் (அக்.16) விடுமுறை அளித்து கல்வித் துறை ஆ.நமச்சிவாயம் உத்தரவிட்டாா்.