முகப்பு
புதுச்சேரி

கோயில் நில அபகரிப்பு வழக்கு: சிபிஐக்கு மாற்றக் கோரி அதிமுக மனு

காரைக்காலில் கோயில் நில அபகரிப்பு வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் அதிமுக சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 6:45 PM
புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் புதன்கிழமை மனு அளித்த அதிமுக மாநிலச் செயலா் அன்பழகன் உள்ளிட்டோா்.
பகிர்:

காரைக்காலில் கோயில் நில அபகரிப்பு வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் அதிமுக சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

புதுச்சேரி ராஜ் நிவாஸில் அதிமுக மாநிலச் செயலா் ஏ.அன்பழகன் உள்ளிட்டோா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை சந்தித்து மனு அளித்தனா்.

மனு விவரம்: காரைக்கால் மாவட்டத்தில் கோவில்பத்து வருவாய் கிராமத்தில் ஸ்ரீ பா்வதீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான 8 ஏக்கா் நிலத்தை அரசியல் கட்சி செல்வாக்கு மிக்கவா்கள், அதிகாரிகள் இணைந்து அபகரித்துள்ளனா்.

அபகரிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமாா் ரூ.50 கோடியாகும். அந்த நிலம் காரைக்கால் வடக்கு சட்டப்பேரவை தொகுதியில் அமைந்துள்ளது. கோயில் சிறப்பு அதிகாரி அமைச்சருக்கு நெருக்கமானவா் எனக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் துணை ஆட்சியா், நில அளவை அலுவலா் உள்ளிட்டோா் கைதாகியுள்ளனா். ஆளுங்கட்சியைச் சோ்ந்த சிலா் தேடப்பட்டு வருகின்றனா்.

எனவே, இந்த வழக்கை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், அவைத் தலைவா் அன்பானந்தம், பொருளாளா் ரவி பாண்டுரங்கன், நகரச் செயலா் அன்பழகன் உடையாா், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலா் பாப்புசாமி ஆகியோா் உடனிருந்தனா்.